அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொதுச் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி கரோனா பரிசோதனை மையங்கள் அதிகப்படுத்த வலியுறுத்திய ஆர்ப்பாட்டமானது வியாழக்கிழமை நடைபெற்றது.

கேப்டன் லெட்சுமி நினைவு நாளையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கீழையூர் ஒன்றியத்தில் மூன்று இடங்களிலும், கீழ்வேளூர் ஒன்றியத்தில் இரண்டு இடங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி கரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்திட வலியுறுத்தியும், பொதுமருத்துவம், பிரசவம் உள்பட வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்காமல் அளிக்க வேண்டும், தொற்று அதிகரிப்பிற்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், சுகாதார ஊழியர்கள் அனைவரும் அரசு அறிவித்தபடி ஊக்கத் தொகையை ஒரு மாத சம்பளமாக வழங்கி, மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிய ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக கீழையூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை முன்பாக கீழையூர் ஒன்றியச் செயலாளர் கே.டி.எம். சுஜாதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் டி. லதா ஆர்ப்பாட்டம் தொடர்பான விளக்க உரை அளித்தார்.

இதேபோல திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை முன்பாக ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.மாலா தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சுசீலா ஆர்ப்பாட்ட விளக்கவுரை வழங்கினார்.  

பாலக்குறிச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.சித்ரா தலைமையில் ஒன்றிய‌ பொருளாளர் ஜி.சாந்தா‌ விளக்கவுரை வழங்கினார்.

கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட வலிவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக ஒன்றிய பொருளாளரும் ஆதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவரான எஸ். அகிலா தலைமையில் ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணவேணி விளக்கவுரை வழங்கினார்.

தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக ஒன்றிய குழு உறுப்பினர் கலையரசி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  ஒன்றிய செயலாளர் சுபாதேவி விளக்க உரை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com