காஞ்சிபுரம் அருகே மகளைக் கொன்ற வழக்கில் தீயணைப்பு வீரர் கைது

காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூரில் மகளைக் கொலை செய்த வழக்கில் அப்பெண்ணின் தந்தையான தீயணைப்பு வீரரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைத்துள்ளனர்.
மகளைக் கொன்ற  தீயணைப்பு வீரர் கைது
மகளைக் கொன்ற தீயணைப்பு வீரர் கைது

காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூரில் மகளைக் கொலை செய்த வழக்கில் அப்பெண்ணின் தந்தையான தீயணைப்பு வீரரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருபவர் பாலாஜி (வயது 46). இவரது மனைவி ஜெயந்தி. உத்தரமேரூர் வெங்கடய்யா பிள்ளை தெருவில் வசித்து வந்த இவர்களுக்கு செந்தாரகை (23) என்ற மகளும் உள்ளார்.

மகள் செந்தாரகைக்கும் அதே உத்தரமேரூர் நரசிங்கத் தெருவைச் சேர்ந்த யுவராஜ் (26) என்பவருக்கும் கடந்த 24.5.2017 ஆம் தேதி உத்தரமேரூரில் உள்ள பச்சையம்மன் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. பின்னர் புதுமணத்தம்பதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் வசித்து வந்துள்ளனர்.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஜூன் மாதம் செந்தாரகை தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இம்மாதம் 8 ஆம் தேதி செந்தாரகை வீட்டில் குளியலறையில் இறந்து கிடந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய பெற்றோர் அவசரம் காட்டியதால் பொதுமக்கள் உத்தரமேரூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செந்தாரகையின் தாயார் ஜெயந்தியின் புகாரின் பேரில் சந்தேக மரணம் எனவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை பிரதே பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து மதுராந்தகம் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் செந்தாரகையின் தந்தை பாலாஜியை உத்தரமேரூர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் அவர் மதுராந்தகம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். உத்தரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி பல்வேறு கல்வெட்டு ஆராய்ச்சிகளையும் செய்து வருபவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com