முகப்பு தற்போதைய செய்திகள்
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 64 ஆயிரம் பேருக்கு கரோனா; மேலும் 1,245 பேர் பலி
By DIN | Published On : 29th July 2020 09:58 AM | Last Updated : 29th July 2020 09:58 AM | அ+அ அ- |

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 64,729 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 44,98,343 -ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. சமீபமாக இங்கு நாள் ஒன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் புதன்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 64,729 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 44,98,343-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,245 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1,52,320 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதுவரை சுமார் 21,85,894 பேர் குணமடைந்துள்ளனர்.