முகப்பு தற்போதைய செய்திகள்
ஆத்தூரில் விடிய, விடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 29th July 2020 12:10 PM | Last Updated : 29th July 2020 12:10 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுக் கிராமங்களில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் மழை இருந்தபோதும் ஆத்தூரில் மழை இல்லாமல் இருந்து வந்தது. இதனையடுத்து கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டத்தில் ஆத்தூரில் இரண்டு நாள்களுக்கு முன்பு மாவட்டத்திலேயே அதிக அளவாக 40 மி.மீ மழை பெய்தது. இதனால் விவசாயிகள் அன்றே மழை வரும் என நம்பிக்கையோடு ஆடிப்பட்டமான பருத்தி மக்காச்சோளம் பயிரிட ஆரம்பித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு கனமழை பெய்தது. தற்போதும் மாவட்டத்தில் அதிக அளவாக 82 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தடுப்பணைகள் நிரம்பியுள்ளதால் நீர் நிலைகள் நிரம்பும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.