முகப்பு தற்போதைய செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 166 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 3 ,171 ஆக உயர்வு
By DIN | Published On : 29th July 2020 01:24 PM | Last Updated : 29th July 2020 01:24 PM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் புதிதாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,171 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் செவ்வாயிக்கிழமை 837 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 154 பேருக்கும், காரைக்காலில் 12 பேர் என மொத்தம் 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 106 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 45 பேர் ஜிப்மரிலும், 3 பேர் கொவைட் கேர் சென்டரிலும், 12 பேர் காரைக்காலிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,171 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனாவால் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 1,112 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே 87 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,869 ஆக அதிகரித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.