நாட்டில் இதுவரை 1,77,43,740 கரோனா பரிசோதனைகள்:  ஐசிஎம்ஆர்

நாட்டில் இதுவரை இல்லாத அளவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ஒரே நாளில் மட்டும் 4,08,855 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 
நாட்டில் இதுவரை 1,77,43,740 கரோனா பரிசோதனைகள்:  ஐசிஎம்ஆர்



புதுதில்லி: நாட்டில் இதுவரை இல்லாத அளவில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ஒரே நாளில் மட்டும் 4,08,855 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

இதுதொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புதன்கிழமை டிவிட்டரில் அளித்த தகவலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை 4,20,898 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தமாக 1,77,43,740 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையானது மேலும் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா மேலும் புதிதகா 47,704  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 14,83,157 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாட்டில் 4,96,988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 9,52,744 பேர் வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com