முகப்பு தற்போதைய செய்திகள்
இந்தோனேசியாவில் புதிதாக 2381 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 29th July 2020 04:07 PM | Last Updated : 29th July 2020 04:07 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
இந்தோனேசியாவில் இன்று புதிதாக 2381 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது,
இன்று புதிதாக 2381 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 1,04,432 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலியின் எண்ணிக்கை 4975 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1599 பேர் மீண்டுள்ளனர். இதையடுத்து மொத்த மீண்டவர்களின் எண்ணிக்கை 62138 ஆக அதிகரித்துள்ளது.