கரோனா பாதிப்பு: சென்னையில் அதிகம், பெரம்பலூரில் குறைவு

கரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் இதுவரையில் சென்னையில்தான் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம் - 96,438, ஒரு லட்சத்துக்கு சற்றுக் குறைவு. ஆனால், தற்போது பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா நோய்த் தொற்றால் தமிழகத்தில் இதுவரையில் சென்னையில்தான் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம் - 96,438, ஒரு லட்சத்துக்கு சற்றுக் குறைவு (ஜூலை 28, செவ்வாய்க்கிழமை மாலை அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில்). ஆனால், தற்போது பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.

அளவில் சிறிதான பெரம்பலூர் மாவட்டத்தில்தான் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு - 368.

உயிரிழப்பும் சென்னையில்தான் அதிகம் - 2056. நீலகிரியில் இறந்தோர் குறைவு, 2  பேர் மட்டுமே.

அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில் 96438 பேரில் 81530 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டனர். 12,852  பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

சென்னையைத் தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,348 பேர் பாதிக்கப்பட்டதில் 9429 பேர் சிகிச்சை பெற்றுத் திரும்பிவிட்டனர். 3680 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

அடுத்து, திருவள்ளூர் மாவட்டம், 12,806 பேருக்கு பாதிப்பு. 8411 பேர் சிகிசசைக்குப் பின் வீடு திரும்பிவிட்டனர். சிகிச்சையில் 4173.

நாலாவது இடத்தில் தென் மாவட்டமான மதுரை. 10,392 பேர் பாதிக்கப்பட்டதில் 7882 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்ப, 2288 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காஞ்சிபுரம் - 8017, விருதுநகர் - 6884, தூத்துக்குடி - 6278, திருவண்ணாமலை - 5644, வேலூர் - 5385, திருநெல்வேலி - 4350, தேனி - 4337, ராணிப்பேட்டை - 4306, கன்னியாகுமரி - 4073, கோவை - 4052, திருச்சி - 3755, கள்ளக்குறிச்சி - 3498, விழுப்புரம்- 3361, சேலம்  - 3309, ராமநாதபுரம்-  3132, கடலூர் -2668, தஞ்சாவூர் - 2366, சிவகங்கை - 2182, புதுக்கோட்டை - 1844, தென்காசி - 1844, திருவாரூர் - 1548, 
திருப்பத்தூர் - 1013.

இவற்றைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் மட்டுமே.

உயிரிழப்பைப் பொருத்தவரை நீலகிரியில் மிகவும் குறைவு, இருவர் மட்டுமே. சென்னையில் மிக அதிகம் 2,056. 

சென்னையைத் தொடர்ந்து, செங்கல்பட்டு - 239, மதுரை 222, திருவள்ளூர் - 222, காஞ்சிபுரம் - 100. மற்ற மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் நல்வினையாக நூறுக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளனர். 

பல மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமிருந்தாலும் கணிசமான மக்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com