முகப்பு தற்போதைய செய்திகள்
கடலூர்: கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் பலி
By DIN | Published On : 29th July 2020 05:33 PM | Last Updated : 29th July 2020 05:35 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் 3 நாளில் உயிரிழந்தார். சடலத்தை அப்புறப்படுத்த 12 மணி நேரம் தாமதம்.
கடலூர் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் 63 வயது முதியவர். சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த 24 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் 27 ஆம் தேதி குணமடைந்து விட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் அவர் புதன்கிழமை அதிகாலையில் திடீரென உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை சுகாதாரத்துறையினர் பாதுகாப்பாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினர்.
இதற்காக 12 மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். பின்னர் சடலத்தை பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்தனர்.