முகப்பு தற்போதைய செய்திகள்
ஹைதராபாத்: 38 பெண் காவலர்கள் பணிக்கு திரும்பினர்
By DIN | Published On : 29th July 2020 06:23 PM | Last Updated : 29th July 2020 06:23 PM | அ+அ அ- |

ஹைதராபாத்: 38 பெண் காவலர்கள் பணிக்கு திரும்பினர்
ஹைதராபாத்தில் பல்வேறு காவல் நிலையத்தை சார்ந்த 38 பெண் காவலர்கள் கரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பினார்கள்.
கரோனாவிருந்து மீண்டவர்களில் ஒரு ஆய்வாளர், ஒரு சார்பு ஆய்வாளர், ஒரு துணை சார்பு ஆய்வாளர், ஒரு தலைமை காவலர்கள், 28 காவலர்கள் மற்றும் 6 ஊர்க்காவல் படையை சார்ந்த காவலர்கள் ஆகும்.
இதுகுறித்து காவல் துறை ஆணையர் அஞ்சனி குமார் கூறுகையில்,
கரோனாவை வென்று மீண்டும் பணிக்கு திரும்பும் நீங்கள் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக உள்ளீர்கள்.
கரோனா பேரிடரில் ஆண் காவலர்களுக்கு இணையாக நீங்களும் முன் களத்தில் நின்று செயல்பட்டீர்கள் என கூறி சான்றிதழ் வழங்கி பாராட்டி அவர்களை பணிக்கு வரவேற்றார்.