தில்லியில் மருத்துவமனையாக மாற்றிய விடுதிகளை விடுவித்தனர்

தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தங்கும் விடுதிகளை மருத்துவமனையாக மாற்றினார்கள். தற்போது தொற்றின் வேகம் குறைவதால் விடுதிகளை விடுவிப்பதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தில்லியில் மருத்துவமனையாக மாற்றிய விடுதிகளை விடுவித்தனர்
தில்லியில் மருத்துவமனையாக மாற்றிய விடுதிகளை விடுவித்தனர்

தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தங்கும் விடுதிகளை மருத்துவமனையாக மாற்றினார்கள். தற்போது தொற்றின் வேகம் குறைவதால் விடுதிகளை விடுவிப்பதாக தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சுட்டரில் கூறியிருப்பதாவது, “தில்லியில் கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தங்கும் விடுதிகளின் படுக்கைகளை மருத்துவமனையாக மாற்றினோம்.

தற்போது தொற்றின் வேகம் குறைந்த நிலையில் பல விடுதிகளில் படுக்கைகள் கடந்த சில நாள்களாக காலியாக உள்ளன. இதை நேரில் சென்று ஆய்வு செய்துவிட்டேன். அதனால் விடுதிகளின் படுக்கைகளை விடுவிக்கிறேன்” என கூறியிருந்தார்.

தில்லி சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனைகளில் 12633 படுக்கைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 4700 படுக்கைகளும் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை நிலவரப்படி தில்லியில் கரோனா தொற்றால் 10887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com