முகப்பு தற்போதைய செய்திகள்
ஒடிசா: தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன் மாணவன் தற்கொலை
By DIN | Published On : 29th July 2020 04:45 PM | Last Updated : 29th July 2020 04:45 PM | அ+அ அ- |

ஒடிசா: தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன் மாணவன் தற்கொலை
ஒடிசா மாநிலத்தில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளிவர இருந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவன் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒடிசா மாநிலம் பட்குரா காவல் நிலையத்திற்கு உள்பட்ட கோடபல்லா கிராமத்தைச் சேர்ந்தவர் மிரஞ்சன் (வயது 15). இவர் அருகேவுள்ள நைந்திபூர் உயர்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர். இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு தூங்க சென்ற மாணவன் காலை வெகுநேரம் ஆகியும் வெளிய வரவில்லை. மிரஞ்சனின் தாயார் அவனை எழுப்ப சென்ற போது அவன் கதவை திறக்காத்தால் கதவை உடைத்து உள்ளே சென்று சென்றுள்ளனர்.
அங்கு அவன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. உடனே அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
பட்குரா காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாணவனின் மரணம் குறித்து முழுமையான காரணம் தெரியாததால், காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.