பஞ்சாப்பில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்
பஞ்சாப்பில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்

பஞ்சாபில் பெட்ரோல் நிலையங்கள் வேலை நிறுத்தம்

பஞ்சாபில் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாபில் தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.73.23 க்கும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.77 க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியர்  ராஜ்குமார் கூறுகையில், “பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இங்கு விற்பதை விட ரூ. 5 குறைவாக பக்கத்து மாநிலங்களான ஹிமாச்சல், ஹரியானா மற்றும் சட்டீஸ்கரில் விற்கப்படுகிறது. ஆனால் பஞ்சாப்பில் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டேவுள்ளது” என தெரிவித்தார்.

இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.19 க்கு விற்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com