முகப்பு தற்போதைய செய்திகள்
மணிப்பூரில் கரோனா தொற்றால் முதல் பலி
By DIN | Published On : 29th July 2020 11:58 AM | Last Updated : 29th July 2020 11:58 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
மணிப்பூரில் கரோனா தொற்றிற்கு சிகிச்சைப் பெற்று வந்த ஆண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அம்மாநிலத்தில் கரோனா தொற்றிற்கு இவரே முதல் பலி.
இதுகுறித்து மண்டல மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் அகன்தெம் சான்டா சிங் கூறுகையில், “தவுபால் மாவட்டத்தில் உள்ள கொங்ஜோம் சபாம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தீவிர நுரையீரல் பிரச்சனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கரோனா சோதனை எடுக்கப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என அகந்தெம் கூறினார்.
மணிப்பூரில் இதுவரைத் தொற்றால் 2317 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 705 பேர் உள்ளனர்.