முகப்பு தற்போதைய செய்திகள்
தேனியில் வழக்குரைஞர் உள்பட 3 பேர் பலி
By DIN | Published On : 29th July 2020 05:23 PM | Last Updated : 29th July 2020 05:47 PM | அ+அ அ- |

தேனியில் வழக்குரைஞர் உள்ளிட்ட 3 பேர் பலி
தேனி மாவட்டத்தில் புதன்கிழமை கரோனா பாதிப்பால் வழக்குரைஞர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேனி, பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய வழக்குரைஞர், பெரியகுளம் கீழ வடகரை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண், கூடலூரைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என 3 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.
தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர், சின்னமனூரைச் சேர்ந்த உத்தமபாளையம் காவல் நிலைய தலைமைக் காவலர், நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த அங்கன்வாடி மைய பணியாளர் உள்ளிட்ட 133 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.