ஆகஸ்ட் 24 ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த இரண்டு பேர் மரணம் அடைந்த நிலையில் அந்த காலியிடங்களுக்கான இடைத் தேர்தல் ஆகஸ்ட் 24 இல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24 ல் மாநிலங்கவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்த ஆண்டு உத்தரபிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பெனி பிரசாத் வர்மாவும், கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர குமாரும் இறந்ததைத் தொடர்ந்து மாநிலங்கவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது.

மேலும், வர்மாவின் பதவிக்காலம் 2022 ஜூலை வரையும், குமாரின் பதவிக்காலம் 2022 ஏப்ரல் வரையும் உள்ளது. அதனால் இடைத்தேர்தலுக்கன அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,

காலியான இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 24 ம் தேதி மாலையே நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com