ஊராட்சித் தலைவர்களுக்கே அதிகாரமா? எங்களுக்கு எதுவும் இல்லையா?

உள்ளாட்சி அமைப்பு முறையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கும் போது எங்களுக்கு எதுவும் இல்லையா? என
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்


வேதாரண்யம்: உள்ளாட்சி அமைப்பு முறையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கும் போது எங்களுக்கு எதுவும் இல்லையா? என வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆதங்கத்துடன் பேசினர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் கமலா அன்பழகன்(அதிமுக) தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.

அப்போது, சுயேச்சை உறுப்பினரான வைத்தியநாதன் பேசிய போது, மக்களுக்கும் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கே எல்லா அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் மக்களிடத்தில் அவர்களுக்கு மட்டுமே செல்வாக்கு ஏற்படுகிறது. ஒன்றியக் கவுன்சிலர்களான எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாததால் மக்களிடம் செல்ல முடியவில்லை என்றார்.

இதையடுத்து, கூட்டத்தில் இருந்த பல உறுப்பினர்களும் எழுந்து நின்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com