நெல்லையில் நுண்உரமாக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் கை துண்டிப்பு: நிவாரணம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சி நுண்உரக்கிடங்கு இயந்திரத்தில் சிக்கி பெண் கை துண்டானது. இதையடுத்து நிவாரணம் கோரியும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூய்மைப் பணியாளர்கள் திருநெல்வேலி


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி நுண்உரக்கிடங்கு இயந்திரத்தில் சிக்கி பெண் கை துண்டானது. இதையடுத்து நிவாரணம் கோரியும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தூய்மைப் பணியாளர்கள் திருநெல்வேலி மாட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கை துண்டான பாக்கியலட்சுமி

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாக்கியலட்சுமியின் கணவர் மனு அளித்தார். அந்த மனுவில், எனது மனைவி பாக்கியலட்சுமி(35) மகளிர் சுயஉதவிக் குழுவின்கீழ் திருநெல்வேலி மாநகராட்சியின் நுண் உரமாக்கும் மையத்தில் தற்காலிக தூய்மைப்பணியாளராக பணியாற்றி வந்தார். இவர், பெருமாள்புரம் என்ஜிஓபி காலனியில் உள்ள நுண் உரமாக்கும் மையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) வேலைசெய்தபோது அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானதாகவும் இதற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com