வியத்நாமில் புதிதாக 45 பேருக்கு தொற்று
By PTI | Published On : 31st July 2020 12:10 PM | Last Updated : 31st July 2020 12:24 PM | அ+அ அ- |

வியட்நாமில் புதிதாக 45 பேருக்கு தொற்று
வியத்நாமின் டா நாங் என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையுடன் தொடர்பில் இருந்த 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியத்நாமில் மூன்று மாதத்திற்கு பிறகு கடந்த வாரம் டா நாங் மருத்துவமனையில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அந்த மருத்துவமனையின் தொடர்பில் இருந்த பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் டா நாங் மருத்துவமனை ஊழியர்கள், தற்போது சிகிச்சைப் பெறும் நோயாளிகள், சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆவர்.
இதனால் டா நாங் பகுதி முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் பல கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது.
இன்று அங்குள்ள ஒரு விளையாட்டு அரங்கில் தற்காலிக மருத்துவமனை ஒன்றை கட்டும் பணி தொடங்கியுள்ளனர். மேலும், இந்த நகர மக்களுக்கு உதவ மற்ற பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் இங்கு வரவழைக்கப்பட உள்ளனர்.