வீரகனூரில் இரண்டு தலைகள் கொண்ட மண்ணுளி பாம்பு மீட்பு

வீரகனூர் அருகே ஒரு தோட்டத்தில் ஊர்ந்து சென்ற சுமார் 3 அடி நீளம் கொண்ட இரண்டு தலை மண்ணுளி பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வீரகனூரில் இரண்டு தலைகள் கொண்ட மண்ணுளி பாம்பு மீட்பு
வீரகனூரில் இரண்டு தலைகள் கொண்ட மண்ணுளி பாம்பு மீட்பு

தம்மம்பட்டி, ஜூலை 31: வீரகனூர் அருகே ஒரு தோட்டத்தில் ஊர்ந்து சென்ற சுமார் 3 அடி நீளம் கொண்ட இரண்டு தலை மண்ணுளி பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் ராமகிருஷ்ணன் என்ற விவசாயியின் தோட்டத்தில்   இன்று பிற்பகல்   சுமார் 3 அடி நீளம் கொண்ட இரண்டு தலை மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.

உடனடியாக தனது தோட்டத்தில் வேலை செய்த பண்யாட்களின் உதவியுடன் அந்த இரண்டு தலை மண்ணுளி பாம்பை ஒரு சாக்குப்பையில் பிடித்து வைத்துக்கொண்டு, தம்மம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தம்மம்பட்டி வனச்சரகர் அசோக்குமார் உத்தரவின் பேரில் விரைந்த வனத்துறையினர் இரண்டு தலை மண்ணுளி பாம்பை மீட்டு வனத்துறைக்கு சொந்தமான காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

முன்னதாக இரண்டு தலைகள் கொண்ட மண்ணுளி பாம்பை பார்ப்பதற்காக பொதுமக்கள்  ஆர்வமுடன் அந்த பகுதிக்கு பார்த்துவிட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com