அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 18,81,205; பலி 1,08,059 ஆக உயர்வு

அமெரிக்காவில் காவலர்களின் முரட்டுத்தனத்தால் கருப்பினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் நடைபெறும்
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 18,81,205; பலி 1,08,059 ஆக உயர்வு

அமெரிக்காவில் காவலர்களின் முரட்டுத்தனத்தால் கருப்பினத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் நடைபெறும் வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 18,81,205 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 1,08,059 ஆக அதிகரித்துள்ளது. 

இதுதகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் குறைந்தது 18,81,205 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 1,08,059 பேர் பலியாகியுள்ளனர்.  

நாடு முழுவதும் நடைபெறும் வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில்,  கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் மரணம் தொடர்பாக அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 15,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 863 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர். 

வன்முறைப் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி, சாண்டா மோனிகா, பெவர்லி ஹில்ஸ், சான் பிரான்சிஸ்கோ, ஓக்லாண்ட், நியூயார்க் மற்றும் கிளீவ்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வன்முறை போராட்டங்களால் கரோனா தொற்றுநோய்களின் சதவீதம் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com