பிரான்சில் கரோனா பாதிப்பு 151,677; பலி 29,021 -ஆக அதிகரிப்பு 

பிரான்சில் புதிததாக 81 பேர் புதன்கிழமை தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து நாட்டில் தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 29,021 ஆக உயர்ந்துள்ளது. 
பிரான்சில் கரோனா பாதிப்பு 151,677; பலி 29,021 -ஆக அதிகரிப்பு 

பாரிஸ்: பிரான்சில் புதிததாக 81 பேர் புதன்கிழமை தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து நாட்டில் தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 29,021 ஆக உயர்ந்துள்ளது. 

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அல்லது தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், தற்போது 13,514 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,  தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,210 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்ட  352  பேர் உள்பட மொத்தம் 1,51,677 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,455 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

பிரான்சில் இரண்டாவது கட்டமாக செவ்வாய்க்கிழமை முதல் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. "பசுமை" மண்டலங்கள் என்று அழைக்கப்படும் நீச்சல் குளங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com