உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்க நிலை ஏற்பட்டதில்லை: ராகுல்காந்தி

உலகப்போரின் போது கூட இந்தளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி கூறியுள்ளார். 
உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்க நிலை ஏற்பட்டதில்லை: ராகுல்காந்தி


புதுதில்லி: உலகப்போரின் போது கூட இந்தளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி கூறியுள்ளார். 

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நான்கு முறை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் மதுக்கடை திறப்பு போன்ற தளா்வுகளை அறிவித்து வருகிறது. 

இந்தச் சூழலில் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ராகுல்காந்தி பொருளாதார நிபுணர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் தொழிலதிபரும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான ராஜீவ் பஜாஜூடன் கலந்துரையாடினார். 

அப்போது அவர் பேசுகையில், நோய்த்தொற்றுக்காக உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனை செய்திருப்பார்களா என்று நான் நினைக்கவில்லை. உலகப்போரின் போது கூட இந்தளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை. அப்போது கூட சில விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தன என்று நினைக்கிறேன். இது ஒரு தனித்துவமான மற்றும் பேரழிவு. பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் எங்கும் செல்ல இயலவில்லை எனக் கூறினார். 

அப்போது ஒருவேளை நீங்கள் இதுபோன்ற தருணத்தில் என்ன செய்தீருப்பீர்கள் என ராஜீவ் எழுப்பிய கேள்விக்கு ராகுல் பதிலளிக்கையில், "மத்திய அரசு ஒரு செயல்பட்டாளராக செயல்பட்டிருக்க வேண்டும். கரோனா எதிரான போரை மாநில முதல்வர்களிடம் நகர்த்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு பின்வாங்கிவிட்டது. இப்போது காலமும் கடந்துவிட்டது." 

மேலும் பொது முடக்கத்தால் எந்தப் பலனும் இல்லை. "உண்மையில் இந்தியாவில் பொது முடக்கம் தோல்வியடைந்து விட்டது.  இந்தியாவில் மட்டும்தான் நோய்த்தொற்று காரணமாக பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்போதே தளர்வுகளும் அதிகரிக்கின்றன" என்றார். 

ஏப்ரல் 30 ஆம் தேதி  ராகுல் கரோனா தொற்று மற்றும் அதன் பொருளாதார பாதிப்புகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜியுடன் மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற பொது சுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com