திருப்பதியில் இரவில் துள்ளி விளையாடும் மான் கூட்டம்

திருப்பதியில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு மான்கள் துள்ளி விளையாடியது.
திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் துள்ளி விளையாடும் மான் கூட்டம்.
திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் துள்ளி விளையாடும் மான் கூட்டம்.


திருப்பதி: திருப்பதியில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு மான்கள் துள்ளி விளையாடியது.

தற்போது நாடு முழுவதும் உள்ள பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள போதிலும், இரவு 7 மணிமுதல் மறு நாள் காலை 5 மணிவரை பொது முடக்கம் அமலில் உள்ளது. அதனால் அந்நேரங்களில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் பெருமளவில் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குள் தங்கள் இஷ்டம் வனத்திலிருந்து சமதளத்திற்கு வந்து இரவு நேரங்களில் விளையாடி வருகிறது. 

திருப்பதியில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் சேஷாசல வன அடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனால் வனத்திலிருந்து உயிரினங்கள் இரவு வேளைகளில் இங்கு வந்து செல்கிறது. சில நாட்கள் சிறுத்தைகளும், பாம்பு வகைகளும் இங்கு இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம். ஆனால் வியாழக்கிழமை நள்ளிரவு மான் கூட்டம் வனத்திலிருந்து செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் வந்து துள்ளி விளையாடியது. இந்த காட்சி அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு சிறிது நேரம் பொழுதுபோக்காக விளங்கியது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com