தேசிய பசுமைப்படை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
தேசிய பசுமைப்படை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் மற்றும் வெட்டிவேரிலானா மாஸ்க் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நாகலூர் பள்ளியில் தேசிய பசுமைப்படை ஆசிரியரான அருள்ஜோதி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பங்கேற்று மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

தேசிய பசுமைப்படை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இன்றைய தினம் மரக்கன்று நடுதல், மரக்கன்று வழங்குதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் தினம் 2020 ஐ யொட்டி நினைவு பரிசு வழங்கல், மற்றும் துணியிலான  வெட்டிவேர் முகக் கவசங்கள் ஹோமியோபதி தடுப்பு மருந்து வழங்கல், கபசுரக் குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.கே. கண்ணன் தலைமை வகித்தார்.

நாகை முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் எம்.ஞானசேகரன் முன்னிலை வைகித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் வரவேற்புரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில்  வட்டார கல்வி அலுவலர் ரவி, நாகை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகை முத்தமிழ் ஆனந்தன் மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஊராட்சி மன்ற தலைவர் வைதேகிராசு மற்றும் துணைத்தலைவர் பொற்கொடி கணேசன், கீழ்வேளூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா, இந்தியன் சொசைட்டி கௌரவ தலைவர் தங்கமோகன்,ஜே.ஆர்.சி வட்டார செயலாளர் பாலாஜி மற்றும் ஜே.ஆர்.சி தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முரளி தனது பங்களிப்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். இறுதியாக இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பசுமை ஆசிரியர் அருள்ஜோதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com