கிருஷ்ணகிரியில் மேலும் 8 பேர் கரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், பர்கூர் மற்றும் மோடிகுப்பம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும்
கிருஷ்ணகிரியில் மேலும் 8 பேர் கரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதி


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், பர்கூர் மற்றும் மோடிகுப்பம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம் மாநிலத்திற்கு பால் ஏற்றி சென்று வந்த லாரி ஓட்டுநர், கேரளா மாநிலத்தில் ஜேசிபி ஓட்டுனராக பணியாற்றியவர், வட மாநிலத் தொழிலாளர்களை ரயில் ஏற்றுவதற்காக கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பூர் சென்று வந்த ஆம்னி வேன் ஓட்டுநர், சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தவர்கள் ஆவார்கள். இந்த எட்டு பேரில் ஒருவர், ஏற்கனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர் என்பதும் இன்னொருவருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது எனக் தெரியவில்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 14 பேர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com