காஞ்சிபுரம் அருகே அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பொதுமக்களால் சிறைபிடிப்பு

காஞ்சிபுரம் அருகே ஐயங்கார் குளம் ஏரியில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்கள் பொதுமக்கள் சிறை பிடித்தனர். 

காஞ்சிபுரம் அருகே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஐயங்கார் குளம் ஏரி உள்ளது. இந்த ஏரி அருகில் உள்ள பல கிராமங்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. 

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் இரண்டு ஜேசிபி மூன்று லாரிகள் மூலமாக ஐயங்கார் குளம் ஏரியில் மணல் திருட்டில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை அப்பகுதியில் சென்ற விவசாயிகள் பார்த்து பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஐயங்கார் கிராம மக்கள் திரண்டு வந்து ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு ஜேசிபி மூன்று லாரிகளை சிறை பிடித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் வந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com