புதுச்சேரியில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 10th June 2020 11:10 AM | Last Updated : 10th June 2020 11:10 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து புதுவை சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... இதன்படி புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. இப்போது 84 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இதய பிரச்சினைகள் உள்ளிட்டவைகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 82 வயது முதியவர் உயிரிழந்தார்.
அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்தமுறை ஏற்பட்ட தவறுகள் இல்லாமல் அவரது உடலை அரசே அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என்றார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ்.