ஈரோடு:இந்து முன்னணியினர் போராட்டம்

மத்திய, மாநில அரசுகளால் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், மத்திய அரசு  ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி
ஈரோடு:இந்து முன்னணியினர் போராட்டம்


ஈரோடு: மத்திய, மாநில அரசுகளால் படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், மத்திய அரசு  ஜூன் 8-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஆலயங்கள் வழிபாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் வழிபாட்டுத் தலங்களை திறக்காமல் உள்ளது.

இந்நிலையில், உரிய  சமூக இடைவெளி விட்டு மக்கள் தரிசனத்திற்காக கோவில்களை உடனடியாக திறந்துவிட வலியுறுத்தி இந்து முன்னணி  சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆலயங்கள் முன்பு ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு மாநகர்  பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில், ஈரோடு மாவட்டத்தலைவர்  ஜெகதீசன்   தலைமையில் ஒற்றை காலில் நின்றபடி பிராத்தனை போராட்டம் நடந்தது.

மாநில துணைத்தலைவர்.பூசப்பன்  முன்னிலை வகித்தார். ஒரு குழந்தை அம்மன் வேடத்தில் நின்றுகொண்டிருந்தது. இதேபோல் மகிமாலீஸ்வரர் கோவில்,கோட்டை ஈஸ்வரன் கோவில் கோட்டை பெருமாள் கோவில், வீரப்பன்சத்திரம்  மாரியம்மன் கோவில் (அம்மன் வேடம்), சூரம்பட்டி மாரியம்மன் கோவில்  திண்டல் முருகன் கோவில் , வெள்ளோடு ஈஸ்வரன் கோவில், அரச்சலூர் குப்பன்னசாமி கோவில் பெருந்துறை செல்லாண்டியம்மன்கோவில், விஜயமங்களம் ஈஸ்வரன் கோவில் காஞ்சிக்கோவில் சீதாதேவி கோவில் ,சித்தோடு சுப்பிரமணியர் கோவில் , ஆர்.என்.புதூர் பெருமாள் மலை கோவில் ,கொடுமுடி மகுடேஸ்வரன் கோவில், சென்னிமலை முருகன் கோவில்  மொடக்குறிச்சி நட்டாத்ரீஸ்வரர் கோவில் மற்றும்  பல கோவில்களில் ஒற்றைக்காலில் நின்று அறப்போராட்டம் நடந்தினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com