பட்டுக்கோட்டையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு ஆற்றங்கரை பகுதியில் நேற்று (செவ்வாய்) இரவு 11 மணி அளவில்
நிவாரண உதவிகளை வழங்குகிறார் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை  உறுப்பினர் சி.வி. சேகர்.
நிவாரண உதவிகளை வழங்குகிறார் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை  உறுப்பினர் சி.வி. சேகர்.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு ஆற்றங்கரை பகுதியில் நேற்று (செவ்வாய்) இரவு 11 மணி அளவில் பாலாஜி-சாந்தி தம்பதியின் கூரை வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. பட்டுக்கோட்டை தீயணைப்புப் படையினர் உடனடியாகச் சென்று தீ பரவாமல் அணைத்தனர்.

இதுபற்றி தகவலறிந்த பட்டுக்கோட்டை சட்டப்பேரவை  உறுப்பினர் சி.வி. சேகர், வட்டாட்சியர் சா. அருள்பிரகாசம் ஆகியோர் புதன்கிழமை காலை சம்பவயிடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறி, அரசு நிதியிலிருந்து ரூ.5,000, சட்டப்பேரவை உறுப்பினர் சொந்த நிதியிலிருந்து ரூ.5,000 என மொத்தம் ரூ.10,000  நிதி உதவியும், அரிசி, வேஷ்டி, சேலை, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கினர். கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு, அதிமுக பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப. ராஜேந்திரன், நகர முன்னாள் அவைத் தலைவர் பாப்பையன் தேவராஜன், வார்டு செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com