கரோனா ஆய்வு: 'ஓ' ரத்த வகை பாதுகாப்பு, 'ஏ' ரத்த வகைகள் எச்சரிக்கை

கரோனோ நோய்த் தொற்று ஓ ரத்த வகையினரை அவ்வளவாகப் பாதிப்பதில்லை, ஏ ரத்த வகையினரைக் கூடுதலாகப் பாதிக்கிறது என்று ஆய்வுகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது.
கரோனா ஆய்வு: 'ஓ' ரத்த வகை பாதுகாப்பு, 'ஏ' ரத்த வகைகள் எச்சரிக்கை

கரோனா நோய்த் தொற்று சிலரைப் பெரியளவில் பாதிக்கிறது, சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்துகிறது. சிலரை அவ்வளவாகப் பாதிப்பதில்லை, அறிகுறிகள்கூட தெரிவதில்லை - ஏன்?

ஒருவருக்கு கரோனா தொற்றுவதிலும் பாதிப்பதிலும் அவருடைய ரத்த வகைக்குப் பெரும் பங்கிருப்பதாக அண்மையில் வெளியான சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

23அன்ட்மீ என்ற அமைப்பு ஏராளமான தரவுகளைச் சேகரித்து மேற்கொண்ட ஆய்வில், மற்ற வகையினரைவிட "ஓ" ரத்த வகை கொண்டவர்களை கரோனா தொற்றுவது குறைவாகவே, சுமார் 9 முதல் 18 சதவிகிதம் வரை, இருக்கிறது என்று அறியப்பட்டுள்ளது.

சுமார் 7.5 லட்சம் பேரிடமிருந்து திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கரோனா பரவலில் மரபுவழிக் காரணங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி ஆராயப்பட்டதில் ரத்த வகைக்கும் பங்கிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், ரத்த வகை கொண்டவர்களை கரோனா வைரஸ் அதிகளவில் பாதிக்கிறது என்பதுடன் அவர்களுக்குக் கூடுதலான சிக்கல்களையும் ஏற்படுத்தி விடுகிறது.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், ஏ அல்லாத  ரத்த வகையினரைவிட ரத்த வகையினர் (ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ்) கூடுதலாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

தவிர, ரத்த வகையினர் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலும் ஸ்பெயினிலும் மேற்கொண்ட ஆய்வுகளும்கூட ஏறத்தாழ இதே முடிவுக்கே வந்திருக்கின்றன.

ரத்த வகையினர் கூடுதலான அளவில் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் வகையினர் குறைவாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

இத்தாலியிலும் ஸ்பெயினிலும் சுவாசப் பிரச்னையில் சிக்கிய சுமார் 1,600 கரோனா நோய்த் தொற்று நோயாளிகளின் மரபணுக்களைப் பரிசோதித்ததில் மற்றவர்களைவிட ரத்த வகையினருக்கான பாதிப்பு 50 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.

அமெரிக்காவில் நியு யார்க் மருத்துவமனையொன்றில் நடத்திய ஆய்வொன்றும் ஏறத்தாழ இதேபோன்ற முடிவுக்கே வந்திருக்கிறது. 

எனினும், இவையே முடிவான ஒன்றல்ல என்பது குறிப்பிடத் தக்கது. நோய் தொற்றுவதிலும் பாதிப்பதிலும் ரத்த வகை எந்த வகையிலான செயல்பாட்டை நிகழ்த்துகிறது என்பது பற்றி இன்னமும் தெளிவாக எதுவும் தெரிய வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com