உலக அளவில் கரோனா பாதிப்பு  82,63,724; பலி 4,46,122 -ஆக உயர்வு

உலக அளவில் கரோனா தொற்று பாதிதித்தோரின் எண்ணிக்கை 82,63,724 ஆக உயர்ந்துள்ளது. 4,46,122 பேர் பலியாகி உள்ளனர்.
உலக அளவில் கரோனா பாதிப்பு  82,63,724; பலி 4,46,122 -ஆக உயர்வு


ஜெனீவா: உலக அளவில் கரோனா தொற்று பாதிதித்தோரின் எண்ணிக்கை 82,63,724 ஆக உயர்ந்துள்ளது. 4,46,122 பேர் பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 43,08,798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

உலக அளவில் இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,18,502 ஆக அதிகரித்துள்ளது, இது முந்தைய நாளில் 1,32,581 ஆக இருந்தது, தற்போது 7,941,791 ஆக குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், உலக அளவில் தொற்றுத்து பாதிக்கு 3,255 பேர் பலியாகியுள்ளனர், இது முந்தைய நாளில் 3,911 ஆக இருந்தது, பலி எண்ணிக்கை 434,796 ஆக இருந்தது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் 34,54,210 பேர்களில் 54,594 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு இதுவரை 22,08,400     பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,19,132 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர், 9,03,041 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com