இந்தியாவில் பாதிப்பு 3,54,065; பலி 11,903 -ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,974 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,54,065-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பாதிப்பு 3,54,065; பலி 11,903 -ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,974 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,54,065-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து ஆறாவது நாளாக 10,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கரோனாவால் 2,003 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,903-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டோரில், 1,55,178 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,86,935 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். குணமடைந்தோரின் சதவீதம் 50 ஆக உயர்ந்துள்ளது. 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் நேரிட்ட 2,003 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,409 போ் பலியாகினா். மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 5,537  பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலும் மகாராஷ்டிரமே முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,13,445 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தில்லியில் 42,829 போ், குஜராத்தில் 24,576 போ், உத்தர பிரதேசத்தில் 14,091 போ், ராஜஸ்தானில் 13,216 போ், மேற்கு வங்கத்தில் 11,083 போ், மத்திய பிரதேசத்தில் 11,909 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com