குன்றத்தூர் வட்டாட்சியருக்கு கரோனா தொற்று உறுதி: அலுவலகம் மூடப்பட்டது

குன்றத்தூர் வட்டாட்சியர் ஜெயசித்ராவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
குன்றத்தூர் வட்டாட்சியருக்கு கரோனா தொற்று உறுதி: அலுவலகம் மூடப்பட்டது

ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் வட்டாட்சியர் ஜெயசித்ராவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டாட்சியராக காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசித்ரா(52) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வட்டாட்சியர் ஜெயசித்ராவிற்கு  கடந்த இரண்டு நாள்களாக சளி மற்றும் தொண்டை வறட்சி இருந்ததால், கடந்த செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டாட்சியர் ஜெயசித்ராவிற்கு வியாழக்கிழமை காலை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்தநிலையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் குன்றத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான பேரூராட்சி ஊழியர்கள் விழாயக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்றத்தூர் மற்றும் மாங்காடு ஆகிய பேரூராட்சிகளும் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சி பகுதிகளில் ஆறாம் கட்டமாக  முழு பொதுமுடக்கம் செயல்படுத்துவது குறித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கடந்த புதன்கிழமை வட்டாட்சியர் ஜெயசித்ரா ஈடுபட்டார். மேலும் பொது முடக்கத்தின் போது கடைகள் அடைப்பது குறித்து குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் ஈடுபட்டார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். 

இந்த நிலையில் வட்டாட்சியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையடுத்து குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com