கரோனா: இந்தியாவில் பலி 12,237 -ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3.6 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 334 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,237 -ஆக அதிகரித்துள்ளது.
கரோனா: இந்தியாவில் பலி 12,237 -ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3.6 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 334 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,237 -ஆக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 12,881 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,66,946-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 7-ஆவது நாளாக பெரிய அளவில்12,881-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. 

இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,60,384 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,94,325 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 52.79 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,16,752 ஆகவும், பலி எண்ணிக்கை 5,651 ஆக உள்ள நிலையில் தொற்று பாதிப்பில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,166 -ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் வியாழக்கிழமை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை தாண்டி 50,193 -ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது மிக மோசமான மாநிலங்களின் பட்டியலில் தேசிய தலைநகரம் தில்லியில் இதுவரை 47,102 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,904 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 25,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,560 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com