கரோனா ஆபத்தால் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியாக கொண்டாட வாய்ப்பு இல்லை: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் கரோனா ஆபத்து அச்சுறுத்தலால் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியாது.
கரோனா ஆபத்தால் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியாக கொண்டாட வாய்ப்பு இல்லை: உத்தவ் தாக்கரே


மும்பை: மகாராஷ்டிரத்தில் கரோனா ஆபத்து அச்சுறுத்தலால் மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியாது. மாநிலத்தில் பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்துவதற்குப் பதிலாக சமூகப் பணிகளைச் செய்வதன் மூலம் திருவிழாவை எளிமையாகக் கொண்டாடுமாறு அம்மாநில உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொற்று பாதிப்பால்  மகாராஷ்டிரம் அதிகயளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் படிப்படியாக திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்ப்டடு வருகின்றனர். மாநில அரசின் பரிந்துரைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் பெரியளவில் கொண்டாடப்படும். குறிப்பாக மகாராஷ்டிரம் மாநிலத்தில் பத்து நாள்கள் ஆடம்பரமாகவும், சிறப்பாக கொண்டாடப்படும். மாநிலம் முழுவதும் பத்து நாள்களும் விழாக்கோலமாக காட்சி அளிக்கும். 

ஆனால் தற்போது கரோனா தொற்று பாதிப்புகளால் நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் முக்கிய விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்து  மகாராஷ்டிரம் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே விழா நடத்தும் பல்வேறு அமைப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கின் மூலம் ஆலோசனை நடத்தினார். 

அப்போது அவர் கூறுகையில், மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த ஆண்டு போன்று ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு, அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூட முடியாது. கரோனா பாதிப்புகளால், விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு ஊர்வலம் இருக்காது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உருவாக்கப்படக்கூடாது. "எளிமை" தான் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் மந்திரமாக  இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

 “பரவலைக் கட்டுப்படுத்த நாம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், மேலும் தொற்று பரவலின் இரண்டாவது அலை பரவ அனுமதிக்க முடியாது. மக்களின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூக பொறுப்பை மனதில் வைத்து விழாவை எளிமையாக கொண்டாடிட வேண்டும்” என்று தாக்கரே கூறினார்.

மேலும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஷிர்டி மற்றும் ஷித்திவினியாக் போன்ற பல சமூக மற்றும் மத அறக்கட்டளைகள் எங்களுக்கு உதவின, அனைத்து கணேஷ் மண்டலங்களிடமிருந்தும் ஒரே ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம், ”என்று தாக்கரே கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com