சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த ராணுவ வீரர் உள்பட 5 பேருக்கு கரோனா

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த ராணுவ வீரர் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த ராணுவ வீரர் உள்பட 5 பேருக்கு கரோனா


சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த ராணுவ வீரர் உள்பட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

சென்னையில் இருந்து சேலத்திற்கு பயணிகள் விமான சேவை கடந்த மே 27-ஆம் தேதி முதல் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சேலம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் வரும் வரை தனிமை மையத்தில் வைக்கப்படுகின்றனர். மே 27 ஏழாம் தேதி சென்னையில் இருந்து சேலம் வந்த 5 பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோன்று கடந்த 16-ஆம் தேதி சென்னையில் இருந்து சேலம் வந்த 5 பயணிகளுக்கு கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், 18 -ஆம் தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் வாயிலாக 72 பயணிகள் வருகை தந்தனர் அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் அசாம் மாநிலத்தில் இருந்து சொந்த ஊரான தர்மபுரி திரும்பிய 51 வயது ராணுவ வீரர், கோவாவைச் சேர்ந்த 25 வயது இளைஞர், கோவாவில் இருந்து சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்பிய 26 வயது இளைஞர், மேகாலயாவில் இருந்து எடப்பாடி திரும்பிய 23 வயது இளைஞர், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சேலம் வந்த 23 வயது இளைஞர் என ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து சேலம் வந்த 48 பேருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com