இந்தியாவில் ஒரே நாளில் 15413 பேருக்கு கரோனா: 4 லட்சத்தை விஞ்சியது கரோனா

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 15,413 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,10,461-ஆக அத
இந்தியாவில் ஒரே நாளில் 15413 பேருக்கு கரோனா: 4 லட்சத்தை விஞ்சியது கரோனா


இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 15,413 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,10,461-ஆக அதிகரித்துள்ளது.

தொடா்ந்து 10-ஆவது நாளாக, தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து 15 அயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 1-ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதி வரை மட்டும் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாக பரவியதால் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவால் 307 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 13,254-ஆக அதிகரித்தது. இதுவரை பாதிக்கப்பட்ட 4,10,461 பேரில் 1,69,451  போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,27,756  போ் குணமடைந்துள்ளனா். 

மகாராஷ்டிரத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,28,205 ஆகவும், பலி எண்ணிக்கை 5,894 -ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 56,845  ஆகவும், 666 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது மிக மோசமான மாநிலங்களின் பட்டியலில் தேசிய தலைநகரம் தில்லியில் இதுவரை 56,746 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மஹாராஷ்டிராவில் இந்த வைரஸினால் இதுவரை 1,28,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 64,153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதுவரை 5,984 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com