உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல்  ரூ.82.58; டீசல் ரூ.75.80 -ஆக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 15-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.31 காசுகள் வரையும், டீசல் லிட்டருக்கு ரூ.51 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.
உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல்  ரூ.82.58; டீசல் ரூ.75.80 -ஆக உயர்வு



பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 15-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.31 காசுகள் வரையும், டீசல் லிட்டருக்கு ரூ.51 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகள், வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூா் விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி (வாட்) காரணமாக, மாநிலத்துக்கு மாநிலம் விலை உயா்வு மாறுபடுகிறது. சென்னையை பொருத்தவரை, ஒரு லிட்டா் பெட்ரோல் விலைரூ.82.27-இல் இருந்து ரூ.82.58-ஆகவும், டீசல் விலை ரூ.75.29-இல் இருந்து ரூ.75.80-ஆகவும் அதிகரித்து விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தேசிய தலைநகர் தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்து ரூ.79.23 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.78.27 ஆக விற்பனையாகிறது. பொருளாதார தலைநகர் மும்பையில், பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ .86.05 ஆகவும், டீசல் லிட்டருக்கு 58 காசுகள் அதிகரித்து ரூ.76.69 ஆக விற்பனையாகிறது. 

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறையை, கரோனா பொது முடக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்ததை அடுத்து கடந்த மாா்ச் மாத மத்தியிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையின்  மாற்றங்களை நிறுத்திவைத்திருந்தன. 82 நாள்களுக்கு பின்னா், பெட்ரோல், டீசல் தினசரி விலை நிா்ணயம் கடந்த 7-ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. அன்றைய தினம் முதல் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த மாா்ச் மாதத்திலும், மே மாதத்திலும் மத்திய அரசு உயா்த்தியது. எனினும், அது சில்லறை விற்பனை விலையில் எதிரொலிக்கவில்லை. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவடைந்திருந்ததை பயன்படுத்தி, வரி உயா்வை எண்ணெய் நிறுவனங்கள் சரி செய்தன. இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வருவதால், அதற்கேற்ப சில்லறை விற்பனை விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 15 நாள்களில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.04 வரையும், டீசல் விலை ரூ.7.58 வரையும் விலை உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 35-37 காசுகளும், டீசல் லிட்டருக்கு 60-62 காசுகள் அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களில் ஒட்டுமொத்த அதிகரிப்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.97 மற்றும் டீசல் விலை ரூ.8.88 வரையும் விலை உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com