ஈரோட்டில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து  கொள்ளை முயற்சி: இளைஞர் கைது

ஈரோட்டில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 
ஈரோட்டில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து  கொள்ளை முயற்சி: இளைஞர் கைது

ஈரோட்டில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஈரோடு பெருந்துறை சீலை சங்கு நகர் பிரிவு அருகே எச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் காவலாளி இல்லை. சிசிடிவி கேமரா மூலமே கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் ஏடிஎம்., மையத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், ஏடிஎம்.,மில் இருந்து பணம் வரும் முகப்பு பகுதியை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். 

ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வசதி மூலம், வங்கி ஊழியர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகள்(அலர்ட் மெசேஜ்) செல்லிடபேசி மூலம் சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியரான ஈரோடு சூரம்பட்டி மாரப்ப 2வது வீதியை சேர்ந்த சுரேஷ்(39), மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ஏடிஎம் மையம் அமைந்துள்ள ஈரோடு தெற்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்மந்ப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த மர்மநபரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

இதில், அந்த நபர் ஈரோடு திண்டல் வள்ளியம்மை நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்தி(21) என்பதும், இவர்  கார் ஓட்டுநராக இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், கார்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com