ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை

தடுப்பு நடவடிக்கையாக நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடந்தது.
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை

தடுப்பு நடவடிக்கையாக நேதாஜி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கரோனாவால் 70 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் முதியவர் ஒருவர் இறந்து போக மீதி 69 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து 36 நாள்களுக்கு யாருக்கும் புதிதாக எந்த ஒரு தொற்றும் இல்லாமல் இருந்தது.  இந்நிலையில் கடந்த சில நாள்களாக வெளி மாவட்டம் குறிப்பாக சென்னையில் இருந்து  வந்தவர்கள் மூலம் மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்த பாதிப்பு தற்போது 83 - ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் 3282 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு தற்காலிகமாக  கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி மாற்றப்பட்டது.  இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும் காலை 6 மணி முதல் காலை 9 வரை சில்லறை வியாபாரமும் நடந்து வருகிறது.  200க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் 50க்கும் மேற்பட்ட பழக்கடைகள் என செயல்பட்டு வருகிறது.  

சமூகக் இடைவேளை கடைபிடிக்கும் வகையில் கடைகள் 3 மீட்டர் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது.  ஈரோடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தற்போது பேருந்து நிலையத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் ஒரு பகுதி காய்கறி மார்க்கெட் ஆகவும் ஒரு பகுதி பேருந்து நிலையமமாகவும் செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில் ஈரோடு வாவுசி பூங்கா பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் கரோனா  பரவத் தொடங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று  மாநகராட்சி சார்பில் ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில்  200-க்கும் மேற்பட்ட நேதாஜி காய்கறி வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பேருந்து நிலைய வளாகத்தில் வந்தனர். அவர்கள் ஆண் வியாபாரிகள் பெண் வியாபாரிகள் என்று தனியாக அவர்களின் சளி மாதிரிகளை சேகரித்தனர்.  

இந்த மாதிரிகள் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த முகாமை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டார் உதவி ஆணையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com