ரூ.45 லட்சத்தில் கும்மிடிப்பூண்டி ஏரி குடிமராமத்து பணி பூமிபூஜை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள ஏரி தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.
எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள ஏரி தூர் வாரும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி  பெரிய ஏரி  உள்ளது. தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஏரியில் குடிமராமத்து பணி துவங்கியது.

ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும்  இந்த குடிமராமத்து பணிக்கான பூமி பூஜைக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.

நிகழ்விற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர், அதிமுக நிர்வாகிகள் எம்.எஸ்.எஸ்.சரவணன், எஸ்.டி.டி.ரவி, இமையம் மனோஜ், ஓடை ராஜேந்திரன், சிராஜூதீன், தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த குடிமராமத்து திட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள இந்த ஏரி தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட உள்ளது. மேலும் மதகுகள் சீரமைக்கப்படுவதோடு மழைகாலத்தில் ஏரியில்  நீர் நிரம்பும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது.

நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் விஸ்வநாதன்,சுசிலா, சாந்தி,வெற்றி ரவி, எம்.ஜி.சேகர், நாகப்பன், ஏசுராஜ், லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com