ஈரான் துறைமுகத்தில் பரிதவிக்கும் தமிழக மீனவர்கள்: விரைந்து மீட்கக் கோரி மீனவ சங்க கூட்டமைப்பு கோரிக்கை 

ஈரான் துறைமுகத்தில் பரிதவிக்கும் தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரம்பரிய மீனவ சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சின்னத்தம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
சின்னத்தம்பி பொதுச்செயலாளர் பாரம்பரிய மீனவ சங்கம் ராமேசுவரம்.
சின்னத்தம்பி பொதுச்செயலாளர் பாரம்பரிய மீனவ சங்கம் ராமேசுவரம்.


ராமேசுவரம்: ராமேசுவரம்: ஈரான் நாட்டில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களை மீட்க சென்ற இரண்டு கப்பல்களில் 44 தமிழக மீனவர்களை கப்பலில் ஏற்ற மறுப்பதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தங்களை அழைத்து செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாட்டில் இருந்து ஈரான் நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி,நாகை,ராமநாதபுரம்,நெல்லை மற்றும் குஜராத், கேரளா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் 764 தமிழக மீனவர்கள்.

இந்நிலையில் நாடு முழுவதிலும் கரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தொழில் முடக்கப்பட்டது. இதனால் மூன்று மாதங்களாக ஈரானில் சிக்சி உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மீனவ சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொரப்பட்டது. 

இந்நிலையில், குஜராத்தில் இருந்து சென்ற கப்பல் குஜராத் மீனவர்களை அழைத்து வந்தனர். மேலும் கேரளத்தில் இருந்து சென்ற விமானம் கேரளம் மீனவர்களை மீட்டுள்ளது. அதிகளவில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு வர இந்திய கப்பல்கள் ஈரான் சென்றுள்ளது. இதில் 620 மீனவர்களை மட்டும் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள 44 தமிழக மீனவர்களை கப்பலில் ஏற்ற மறுப்பதாக மீனவர்கள் வாட்செப் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இந்த கப்பல்களில் செல்லுவதற்கான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாஸ்போட், விசா நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டு கப்பலில் ஏறுவதற்கு தயாராக இருந்துள்ள நிலையில் இந்திய அதிகாரிகள் கப்பலில் ஏற்ற மறுப்பதாகவும் இதனால் நாடு திரும்ப வழியின்றி தவிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்செப் மூலம் வீடியே பதிவு செய்து அனுப்பி உள்ளனர். 

கப்பல் புறப்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரம்பரிய மீனவ சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சின்னத்தம்பி மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com