விராலிமலை: கரோனா பாதித்தவர் அதிக நேரம் வங்கியில் இருந்ததால் வங்கி மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

விராலிமலையில் கரோனா பாதிப்புக்குள்ளானவர் புதன்கிழமை வங்கியில் அதிக நேரம் செலவிட்டதால் வியாழக்கிழமை வங்கி மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
விராலிமலை: கரோனா பாதித்தவர் அதிக நேரம் வங்கியில் இருந்ததால் வங்கி மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

விராலிமலை: விராலிமலையில் கரோனா பாதிப்புக்குள்ளானவர் புதன்கிழமை வங்கியில் அதிக நேரம் செலவிட்டதால் வியாழக்கிழமை வங்கி மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

விராலிமலையைச் சேர்ந்த 41 வயது மதிக்கதக்க ஒருவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக புதன்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டது. அவர் தற்போது புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த புதன்கிழமை மதியம் விராலிமலை கடைவீதியில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி பரிவர்தனைக்காக சென்றவர் வங்கியில் நீண்ட நேரம் வங்கியின் உள்ளே செலவழித்தாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் வங்கியை மூடி கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பினை உறுதிசெய்த பின்னர் வங்கியை திறக்கவேண்டும் என்று வங்கி நிர்வாகத்திற்கும், மருத்துவத் துறையினருக்கும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வியாழக்கிழமை ஒரு நாள் வங்கிக்கு விடுமுறையளித்து கிருமிநாசினி தெளிக்கக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com