காவல், சிறைத் துறையினருக்கு முழு உடல் கவசம் வழங்க கோரிய வழக்கு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

காவல் துறையினர், சிறைத் துறையினர் மற்றும் சிறைக் கைதிகளுக்கு முறையாக கரோனா நோய்த் தொற்று பரிசோதனை நடத்த வேண்டும்.
காவல், சிறைத் துறையினருக்கு முழு உடல் கவசம் வழங்க கோரிய வழக்கு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


சென்னை: காவல் துறையினர், சிறைத் துறையினர் மற்றும் சிறைக் கைதிகளுக்கு முறையாக கரோனா நோய்த் தொற்று பரிசோதனை நடத்தவும், முழு உடல் கவசம், முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவைகளை வழங்க அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் காவல்துறை மற்றும் சிறைத் துறையினரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் இரவு பகலாக முன்நின்று பணியாற்றும் காவல்துறையினருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. 

கடந்த மே மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட 19 கைதிகளில் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புழல் சிறையில் கரோனா நோய்த் தொற்று தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளது.மேலும் புழல் சிறையில்  இதுநாள் வரை கைதிகளுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனைகளோ,  டுப்பு நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. 

எனவே காவல் துறையினர், சிறைத் துறையினர் மற்றும் சிறைக் கைதிகளுக்கு முறையாக கரோனா நோய்த் தொற்று பரிசோதனை நடத்த வேண்டும்.மேலும் இவர்களுக்கு தேவையான முழு உடல் கவசம், முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்டவைகளை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா,  கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு தரப்பில் சிறைத்துறை அதிகாரிகள், காவல் துறையினர், சிறை கைதிகளுக்கு  முக கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com