முகப்பு தற்போதைய செய்திகள்
கம்பம் உழவர் சந்தைக்கு காய்கனி வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 27th June 2020 02:51 PM | Last Updated : 27th June 2020 02:51 PM | அ+அ அ- |

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் புதிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு காய்கனிகள் வரத்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை 27 டன் காய்கனிகள் வந்தது.
தேனி மாவட்டம் கம்பத்தில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா திடலில் உழவர் சந்தை செயல்பட்டது, கரோனா வைரஸ் தொற்றால், ஏல விவசாயிகள் மேல்நிலைப்பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டது, அங்கும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக காய்கனிகள் விற்பனை நடைபெற்றது.
தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதால் உழவர்சந்தையை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சமூக பரவலை தடுக்க கம்பம் க.புதுப்பட்டி சாலையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு விவசாயிகள் கடைகளை அமைத்துள்ளனர். பொதுமக்கள் வாகனங்களை நெரிசல் இல்லாமல் நிறுத்தி காய்கனிகளை வாங்கி செல்கின்ரனர்.
இது பற்றி நிர்வாக அலுவலர் கண்ணதாசன் கூறியது, இடமாற்றம் செய்யப்பட்டவுடன், 10 முதல் 15 டன் காய்கறிகள் வரத்து இருந்தது, தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து சனிக்கிழமை 27 டன் வரத்து வந்து, விற்பனையாகி உள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது பற்றி கண்காணிக்கப்படுகிறது, வரும் காலங்களில் வரத்து கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.