முகப்பு தற்போதைய செய்திகள்
செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுக்கு கரோனா
By DIN | Published On : 27th June 2020 11:00 AM | Last Updated : 27th June 2020 11:01 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பாதிப்புக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் பலியான நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பழனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரசு-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள். தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினரையும் தொற்று பாதித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.