கரோனா பரவல்: மதுபான கடையை மூட சொல்லி  பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ஒரத்தநாடு அருகே கரோனா பரவுதலை தடுக்கும் முயற்சியாக அரசு மதுபான கடையை மூட சொல்லி சனிக்கிழமை பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 
மதுபான கடையை மூட சொல்லி சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள். 
மதுபான கடையை மூட சொல்லி சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள். 

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே கரோனா பரவுதலை தடுக்கும் முயற்சியாக அரசு மதுபான கடையை மூட சொல்லி சனிக்கிழமை பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

ஒரத்தநாடு வட்டம் தொண்ட்ராம்பட்டு கிழக்கு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தொண்டராம்பட்டு கிழக்கு, தொண்டராம்பட்டு மேற்கு , திருமங்கலக்கோட்டை மேல காலணி, திருமங்கலக்கோட்டை கீழ காலணி மற்றும் கண்ணுகுடி பகுதியைச் சேர்ந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் மேலும் கரோனா தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்று அனைத்து மாளிகை கடைகள் மற்றும் உணவங்களை திறக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். அதன் பேரில் சனிக்கிழமை இப்பகுதியில் கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கவில்லை. 

இந்நிலையில் தொண்டராம்பட்டு - ஒரத்தநாடு சாலையில் உள்ள அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பணை நடைபெறுவதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் அரசு மதுபான கடையை மூட சொல்லி முற்றுகை  போராட்டம் நடத்தினர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொண்டராம்பட்டு கிழக்கு பகுதியில் இரண்டு நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யபப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இந்த பகுதியில் ஒருவார காலமாக நடமாட்டத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில் தொற்று பரவுதலை தடுக்கும் நோக்கில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதி வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்திருக்கும் வேளையில் அரசு மதுபான கடை திறந்து வியாபரம் நடைபெறுவதால் 5 கிராமங்களுக்கு நோய் தொற்று பரவும் அபயாம் உள்ளது . ஆகவேதான் அரசு மதுபான கடையை மூட சொல்லி முற்றுகை போராட்டம் நடத்துகிறோம் என்றனர். 

தகவல் அறிந்து பாப்பநாசம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com