ஈரோடு: கரோனா தடுப்பு நடவக்கையாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை

கரோனா தடுப்பு நடவக்கையாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஈரோடு: கரோனா தடுப்பு நடவக்கையாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை


ஈரோடு: கரோனா தடுப்பு நடவக்கையாக நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக  ஈரோடு ஆர்கேவி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.  இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும்,  காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.  மொத்தம் 300 க்கும் மேற்பட்ட கடைகள் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டதை அடுத்து ஏற்கனவே மாற்று இடமான ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைக்கும் பணி முழு அளவில்  நடைபெற்று வந்தது.  

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது அலையாக கரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு பட்டியலில் ஈரோடு மாவட்டமும் இடம்பெற்று வருகிறது. காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து மார்க்கெட் வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்துக்கு  தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.  இதையடுத்து சில்லரை வியாபாரிகள் நேற்று தங்களது கடைகளை காலி செய்து சென்றனர். 

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கையாக சனிக்கிழமை ஒருநாள் மார்க்கெட் முழுமையாக விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி சனிக்கிழமை நேதாஜி காய்கறி  மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  

இந்நிலையில் வ.உ.சி பூங்காவில்  700க்கும் மேற்பட்ட காய்கறி மார்க்கெட் கடைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எப்போதிலிருந்து அங்கும் காய்கறி மார்க்கெட் செயல்படும் என்பது வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com