கடலில் மூழ்கி 3 மீனவர்கள் பலி: தமிழக அரசு நிவாரணம் வழங்கிட மீனவ சங்கம் கோரிக்கை

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனே நிவாரணம் வழங்கிட வேண்டும் என மீனவ சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் சனிக்கிழமை கோரிக்கை விடுத்தார். 
கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் ரெஜின் பாஸ்கர், ஆஸ்டின்(எ)சுரேந்திர, மலர் வண்ணன்
கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் ரெஜின் பாஸ்கர், ஆஸ்டின்(எ)சுரேந்திர, மலர் வண்ணன்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உடனே நிவாரணம் வழங்கிட வேண்டும் என மீனவ சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் சனிக்கிழமை கோரிக்கை விடுத்தார். 

ராமநாதபுரம் மாவட்டம்,ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து 13 ஆம் தேதி சனிக்கிழமை 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுகிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் ஹெட்டோ என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை. 

இதனையடுத்து, படகு உரிமையாளர் மாயமான விசைப்படகு மற்றும் படகில் சென்ற மலர் வண்ணன்(55), ரெஜின்பாஸ்கர்(43), ஆஸ்டின்(19) (எ) சுஜிந்திரா, ஜேசு(60) மீனவர்களின் விசைப்படகு காற்றில் சிக்கி படகில் கடல் நீர்உள் புகுந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த நான்கு பேரும் கடலில் மூழ்கினர்.  

இதனையடுத்து, கடலில் மூழ்கி மாயமான நான்கு மீனவர்கள் தொடர்ந்து தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்டனர். மற்ற மூன்று மீனவர்களில் ஒவ்வொரு மீனவராக சடலமாக மீட்கப்பட்டு உடல் கூறு செய்த பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில். துமிழக அரசு கடலில் மீனவர்கள் உயிரிழந்தால் உடல் கண்டெடுக்கப்பட்ட உடன் தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பது வழக்கம். 

இந்நிலையில், மூன்று உடல் கண்டெடுக்கப்பட்ட அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்களது குடும்பங்களுக்கு இது வரை தமிழக அரசு நிவாரணம் அறிவிக்கவில்லை, இதனால் மூன்ற மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் மோசமான  நிலையில் உள்ளதால் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனே நிவாரணம் அறிவிக்க வேண்டும் என மீனவ சங்க பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com